பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (09:56 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்தது என்பதையும் குறிப்பாக சென்செக்ஸ் 63 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றே சரிந்து உள்ளது. இருப்பினும் தொடர்ந்து 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் இருப்பதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 68 புள்ளிகள் சரிந்து 63 ஆயிரத்து 71 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை வெறும் 6 புள்ளிகள் மட்டுமே சரிந்து 18,708 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இன்று லேசாக சரிந்தாலும் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தகுந்த ஆலோசகர்களின் ஆலோசனையை பெற்று பங்கு சந்தையில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்