7 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிந்தது!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:57 IST)
கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை ஏற்றம் கண்டுள்ளது.
 
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று சவரனுக்கு 176 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4747 -க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.176 குறைந்து ரூ.37,976 க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்