காதல் என்ன செய்யும் - காற்று வெளியிடை என் காதல்

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:08 IST)
கவி கண்ணதாசன் தன்னை பற்றி  மட்டும் அல்ல, காதலை பற்றியும் சொன்ன வரிகள்,
மானிட இனத்தை (மனதை) ஆட்டி வைப்பேன், அவர் (அது) மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன், நான் நிரந்தரமானவன், அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை. 



 

காதல் என்ன செய்யும் ?

பெரும் பசி கொண்டவன், உணவைக்  கண்டவுடன் உலகை வென்றது போல் மகிழும் மனோ நிலை தான், காதல் கொண்டவனின்  மனோ நிலை.காதல் அற்புதமானது, அழகானது, அது ஒரு மாய உலகம். பார்க்கும் இடங்கள் எல்லாம் பச்சை நிறங்கள்,  பூக்கும் பூக்கள் எல்லாம் ரோசா மலர்கள். அவனுக்கு அவள் உலகம், அவளுக்கு அவன் உலகம். தேவ தட்சனாலும் வரையறை செய்ய முடியாத நினைவுகளின் சங்கமம் காதல். 

 மீண்டும் மீண்டும் ஜனனம் செய்யும் காதல்

வீரனை போரிலும், யோக்கியனை கடனிலும், நண்பனை கஷ்டத்திலும், அறியலாம். ஆனால் காதலை நாம் சந்தோஷத்தில் மட்டும் அறிய முடியும். வரலாற்றில் வெற்றி பெற்றவன் மட்டுமே இடம் பெற முடியும். ஆனால் காதலில் தோற்றவர்கள் மட்டுமே நின்று நிலை பெறுகிறார்கள். யார் சொன்னது ? லைலா மச்னுவும், ரோமியோ ஜூலியட்டும், அபிகாபதி அமராவதியும், ஷார்ஜகான்  மும்தாஜும் இறந்து விட்டார்கள் என்று.     உலகம் அழியும் வரை, காற்று உலகின் கடைசி மனிதனை வருடும் வரை இவர்கள் வாழ்வார்கள்.

காவியங்கள் செய்யும் காதல்

காதல் என்ன செய்யவில்லை ?  எதை செய்யவில்லை ?
பெண்ணின் காதல் பார்வைப்  பட்டு, மாவீரர்கள் களம் கண்ட கதைகளை சொல்லட்டுமா ?
பெண்ணின் காதல் மொழி கேட்டு உருவான மஹா கவிகளின் காவியங்கள் சொல்லட்டுமா ?

அவள் தான், அவளே தான், அவள் மட்டும், அவள் மட்டுமே தான் என் ஜனனம் என்று வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கிற தேவதாஸ்களின்   வாழ்க்கையை சொல்லட்டுமா ?
ஒரு ஜென்மம் மட்டும் அல்ல, ஏழு ஜென்மங்களும் தொடர்ந்து வரும் நெஞ்சில் ஓர் ஆலயம் காதல்களை பற்றி சொல்லட்டுமா ?

பெண்ணின் புன்னகை மொழிகள் கேட்டு பைத்தியம் ஆன/பைத்தியம் ஆகி கொண்டிருப்பவர்களின் சோக தமிழ் சொல்லட்டுமா ?பெண்ணின் ஒன்றை சொல்லுக்காக பல நாட்கள் தவம் இருக்கும்/ தவம் இருந்து கொண்டிருக்கிற தவஞ்ஞானிகள் கதைகள் பற்றி சொல்லட்டுமா ? அதிகம் ஆழம் இல்லை ஆனாலும் அவளின் கன்ன குழியில் விழுந்து எழ முடியாத பயில்வான்களின் கதையை சொல்லட்டுமா ?

நிழல்களும் நிஷங்களும் சரி பாதியாய், காத்திருப்பது மட்டுமல்ல, கண்ணீரும் கூட, காதலின் ரசவாதமே ! இதயங்களின் மொழி பேசி  காதல் செய்வோம் !


இரா .காஜா பந்தா நவாஸ் ,
sumai244@gmail.com
அடுத்த கட்டுரையில்