தேர்தலில் தோல்வி… ஆனால் மத்திய அமைச்சர் ?– ஹெச் ராஜாவின் அடுத்த அவதாரம் !

Webdunia
சனி, 25 மே 2019 (13:22 IST)
தேர்தலில் தோற்றாலும் ஹெச் ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெறாமலேயே பாஜக் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது . காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. குறிப்பாக தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் ஸ்டார் வேட்பாளர்களைக் களமிறக்கிய பாஜக ஐந்திலும் மண்ணைக் கவ்வியது.

ஆனாலும் தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுக்க முன்வந்துள்ளது பாஜக தலைமை. அதனால் தமிழகத்தில் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் பதவி அளிக்கபட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்