தேனியின் தோனிக்குக் கப்பல் துறை ? – ஓபிஎஸ்-ன் அடுத்த ப்ளான் !

சனி, 25 மே 2019 (09:01 IST)
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ரவீந்தரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டு வருகிறாராம் அவரது தந்தை.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜகவே தனிப்பெரும்பாண்மைக்குத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவைப் பற்றி எந்த தகவலும் பாஜக வட்டாரத்தில் இருந்து வெளியாகவில்லை.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். துணை முதல்வர் ஒபிஎஸ், தன் மகன் ஓபி ரவீந்தரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அமைச்சரவையில் கப்பல் மற்ற்ம் போக்குவரத்துத்துறை பதவி கேட்டு வருகிறாராம். தேனியின் தோனி என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஓபி ரவிந்தரநாத் குமாருக்கு அமைச்சர் வழங்கப்படுமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்