கண்கலங்கியபடி வாக்களித்த ஏ சி சண்முகம் – பின்னணியில் வேலூர் தேர்தல் ரத்தா !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (13:34 IST)
வேலூர் தொகுதி வேட்பாளர்களில் ஒருவரான ஏ சி சண்முகம் இன்று திருவண்ணாமலையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் 10 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தலை நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியது தேர்தல் ஆணையம். ஆவணங்களைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி அவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவில் அவர் ’பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்திருப்பது முறையானது அல்ல’ எனக் கூறியிருந்தார்.ஆனால் தேர்தல் ரத்து சரியானதுதான் எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஏ சி சண்முகம் இன்று திருவண்ணாமலையில் உள்ள ஆரணி தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ எனக் கூறினார். அப்போது அவர் மிகவும் சோகமாகக் கண்கலங்கி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்