வாழைப்பழத்துக்குதான் முதல்வர் காசு கொடுத்தார் – தேர்தல் அதிகாரி அடடே பதில் !

புதன், 17 ஏப்ரல் 2019 (17:28 IST)
தமிழகத்தை தேர்தலை முன்னிட்டு வாக்குக்கு பணம் கொடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் அவரது ஆதரவளரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கொடவுன் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு இது சம்மந்தமான தகவல்களை ஏப்ரல் 3 ஆம் தேதி அளித்தது.

இது சம்மந்தமாக ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யப் பரிந்துரை செய்தது. அதை முன்னிட்டு குடியரசுத்தலைவரும் தேர்தலை ரத்து செய்தார். இது ஒருபுறமிருக்க ஆளும் கட்சியினர் பணம் கொடுப்பதை மட்டும் கண்டுகொள்ளாமலும் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற முதல்வரின் வீடியோ ஒன்று வெளியாகியது. ஆனால் அதன் மீதுகூட எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள சத்ய்பிரதா சாஹூ ‘ ஆரத்தி எடுத்தப் பெண் முதல்வருக்கு அன்பளிப்பாக பழங்கள் கொடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வர் பணம் கொடுத்தார். எனவே அதில் தவறொன்றும் இல்லை’ எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்