திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (21:00 IST)
அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலுக்காக பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மெகாகூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இக்கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் தென்காசி நாடாலுமன்ற வேட்பாளர் கிருஷ்னசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
 
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
 
பதவிகளைப் பெறுவதற்காக கூட்டணி வைக்கவில்லை. மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடுவார்கள். 
 
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு திமுகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்