வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பை பார்க்கும்போது திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், 'முதல்வர் பழனிச்சாமி உண்மையான விவசாயி என்றால் நானே அவருக்கு ஆதரவு கொடுப்பேன். ஆனால் அவர் விவசாயி அல்ல, விஷவாயு என்று கூறினார். மேலும் ஏரி, குளம், கினறு, தென்னை மரத்தை அழித்தவர் தான் இந்த எடப்பாடி என்றும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.
மேலும் ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன், தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி தூக்கி வீசப்படும் என்றும் கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தர்.