டீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு #Breaking

Webdunia
சனி, 9 மே 2020 (15:23 IST)
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சென்னையில் மட்டும் டீக்கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்