விதிமுறைகளை பின்பற்றிதான் விற்பனை செய்தோம்! – தமிழக அரசு மேல்முறையீடு!

சனி, 9 மே 2020 (14:49 IST)
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் தடைவிதித்த நிலையில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்