சந்திரயான் வெற்றியை கொண்டாட புதிய ஸ்மார்ட்போன்! – Techno Spark 10 Pro Moon explorer edition!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:15 IST)
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கௌரவிக்கும் விதமாக Techno Spark 10 Pro Moon explorer edition அறிமுகப்படுத்தப்படுகிறது.



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவு குறித்த ஆய்வுக்காக அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்து ஆய்வுகளை செய்துள்ளது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய நாடுகளில் 4வது நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. இதை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் சந்திரயான் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக டெக்னோ ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் புதிய Techno Spark 10 Pro Moon explorer edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Techno Spark 10 Pro Moon explorer edition சிறப்பம்சங்கள்:
  • 6.78 ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹெலியோ G88 சிப்செட்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, ஹை ஓஎஸ் 12.6
  • 50 எம்பி + 0.08 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 32 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 18 W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Techno Spark 10 Pro Moon explorer edition-ல் மெமரி கார்டு வசதி, எஃப் எம் ரேடியோ, சைடு ஃபிங்கர் சென்சார் ஆகிய கூடுதல் அம்சங்களும் உள்ளது. இதன் நிறம் நிலவு பயணத்தை குறிக்கும் வகையில் ப்ளாக் மற்றும் க்ரே கலர் வேரியண்டில் அமைந்துள்ளது. இதன் விலை ரூ.11,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்