கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது . இந்நிலையில் இதில் கணக்கு வைத்துள்ளோரின் சொந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுல் இந்த கூகுள் சமூக வலைதளத்தின் துணைதலைவரான பென் ஸ்மித் இதைப் பற்றி குறிப்பிடும் போது:
இந்த தகவல் திருட்டு பற்றி உருவாக்கியவர்களுக்கு தெருயும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.அப்படி திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள கூகுல் பிளஸை மூடப்போவதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து அதன் துணைதலைவர் கூறுகையில் இதன் பயனாளர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ப வாய்ப்புகள் தரப்பட்டு இன்னும் சில மாதத்திற்குள் இந்நிறுவன்ம் மூடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.