விற்பனையில் சக்கைப்போடு போடும் ரெட்மி நோட் 12 ப்ரோ! – சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (15:36 IST)
ஷாவ்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரெட்மி நோட் 12 ப்ரோ விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஷாவ்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரெட்மி நோட் 12 ப்ரோ ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது.

இதன் சிறப்பம்சங்களாவன:
  • மீடியாடெக் டைமென்சிட்டி 1080 MT6877V, ஆக்டா கோர் ப்ராசஸர்,
  • மாலி G68 MC4 கிராபிக்ஸ், அமேலெட் டிஸ்ப்ளே, 6.67 இன்ச் (16.94 செமீ)
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி, ஆண்ட்ராய்டு 12
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 50 எம்.பி வைட் ஆங்கிள் கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள், 2 எம்.பி மேக்ரோ லென்ஸ்
  • ஆட்டோ ப்ளாஷ், ஆட்டோ ஃபோகஸ், ஃபேஸ் டிடெக்‌ஷன்,
  • வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி, ஜிபிஎஸ்
  • 5000 mAh பேட்டரி, டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங், 67 வாட்ஸ்,

இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் பர்ப்பிள், க்ளேசியர் ப்ளூ, ஆனிக்ஸ் ப்ளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை எம்.ஐ வலைதளத்தில் ரூ.27,999க்கும் க்ரோமா, ப்ளிப்கார்ட் தளங்களில் ரூ.24,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்