முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ தனது புதிய OPPO A79 5G மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
விலைக்குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் பல முன்னணி நிறுவனங்களும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO A79 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
OPPO A79 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.72 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட்
2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
ஆண்ட்ராய்டு 13
8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
50 எம்பி + 2 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
5000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்,
இந்த OPPO A79 5G ஸ்மார்ட்போன் க்ளோவிங் க்ரீன், ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.19,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும், ஓப்போ விற்பனையகங்களிலும் இந்த OPPO A79 5G ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.