உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் யூட்யூபில் Ad Blacker பயன்படுத்தினால் அந்த கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ ப்ளாட்பார்ம் யூட்யூப். கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டிக் கிடக்கும் யூட்யூபில் வீடியோக்களை பார்க்க எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் இலவசமாக பார்க்கும்போது இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்களை சகித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சிலர் சில Ad Block செயலிகளை பயன்படுத்தி யூட்யூபில் இதுபோன்ற விளம்பரங்கள் வருவதை நைஸாக தவிர்த்து விடுகிறார்கள். இதை கண்டறிந்த யூட்யூப் தற்போது Ad Blocker களை கண்டுபிடிக்கும் அளவு யூட்யூப் தளத்தை மேம்படுத்தியுள்ளது.
இதனால் யாராவது Ad Blocker பயன்படுத்தி யூட்யூபில் விளம்பரங்களை தவிர்த்து விட்டு வீடியோ பார்த்தால் தொடர்ந்து 3 வீடியோக்கள் பார்த்தபின் அவர்களது கணக்கை யூட்யூப் முடக்கி விடும். Ad Blocker ஐ நீக்கினால் மட்டுமே மீண்டும் வீடியோக்களை பார்க்க முடியும். பரிசோதனை முயற்சியில் உள்ள இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்க்க விரும்புபவர்கள் Youtube Premium கட்டி சிறப்பு வசதிகளை பெறலாம் என யூட்யூப் தெரிவித்துள்ளது.