தனது கூகிள் தயாரிப்புகளை இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்ய கூகிள் திட்டமிட்டு வருகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது உற்பத்தியை தொடங்கி வரும் நிலையில் கூகிளும் இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்கி நடத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், சமீபத்தி மும்பை, டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ சொந்த விற்பனையகங்களை தொடங்கி பெரும் லாபம் பார்த்துள்ளது.
அதை தொடர்ந்து இந்தியாவில் தனது தயாரிப்புகளை தொடங்க கூகிளும் முயற்சித்து வருகிறது. தனது கூகிள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலிருந்து தயாரிக்க கூகிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான லாவா, ஃபாக்ஸ்கான், டிக்ஸான் நிறுவனங்களுடன் கூகிள் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வரி குறையும் என்பதால் பிக்ஸல் இந்தியாவில் நல்ல விற்பனையை பெறும் என கூகிள் எதிர்பார்க்கிறது.