108 MP கேமரா குவாலிட்டி, 8 GB RAM.. இன்னும் பல சிறப்பம்சங்கள்! – வருகிறது Infinix Note 30 5G!

வியாழன், 15 ஜூன் 2023 (16:00 IST)
பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான Infinix Note 30 5G அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை உச்சம் பெற்றுள்ள நிலையில் நாளுக்கு நாள் புதிய மாடல்கள் பல களமிறங்கிக் கொண்டே இருக்கின்றன. 5ஜி தொழில்நுட்பத்தையும் தாண்டி கேமரா, ப்ராசஸர் உள்ளிட்டவற்றிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அப்படியாக தற்போது 5ஜியுடன் நல்ல சிறப்பம்சங்களையும் சேர்த்து தனது புதிய Infinix Note 30 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்தியாவிலேயே இந்த Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் முதன்முறையாக டைமென்சிட்டி 6080 சிப்செட்டுடன் வெளியாகிறது.



Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

இந்த Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்திற்கான 14 பேண்டுகளுடன் வெளியாகிறது. எனவே இணைய வேகம் துல்லியமாக இருக்கும். மேலும் 108 எம்.பி ப்ரைமரி கேமரா தெளிவான புகைப்படங்களை எடுக்க சிறப்பானதாக இருக்கும். 1440p தரத்தில் 30fps QHD வீடியோக்களும் இதில் எடுக்க முடியும்.



இதில் 1TB வரை மெமரி கார்டு நீடித்துக் கொள்ள கூடிய மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. மேஜிங் ப்ளாக், இண்டெஸ்டெல்லார் ப்ளூ, சன்செட் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் வெளியாகிறது.

இந்த Infinix Note 30 5G  ஸ்மார்ட்போன் 4 ஜி.பி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999 ஆகும். Infinix Note 30 5G 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999 ஆகும். இந்த Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் ஜூன் 22ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையை தொடங்குகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்