அப்போது அவர் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையான தாக்கி பேசினார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஜோக் இன் இந்தியா என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது என்றும் பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றும், மொத்தத்தில் இந்தியாவை 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளை ஆட்சி செய்துள்ளன என்றும் இதனால் தான் நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.