பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு தன்னை நிரூபித்த சூர்யகுமார் யாதவ் – இணையத்தில் பெருகும் பாராட்டுகள்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (09:03 IST)
இந்திய அணிக்காக சூர்யக்குமார் யாதவ்வை தேர்வு செய்யாதது குறித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மும்பையை சேர்ந்த சூர்யகுமார் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் இப்போது அவருக்கு ஆதரவான குரல்கள் மேலும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்