ஐபிஎல்-2020; கோலி அணி தோல்வி....டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (23:22 IST)
ஐபிஎல் -2020 தொடரில்  இன்று 55 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி என்பதால் டெல்லி அணி டென்சனாக ஆடியது.

இந்நிலையில் முதலில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 19 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்