பிரவோவிற்கு தோனி கூறிய அறிவுரை என்ன? இதுதான் வெற்றிக்கு காரணமா?

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:41 IST)
ஐபிஎல் 11 சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரும் மோதினர். இதில், சிஎஸ்கே 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அம்பதி ராயுடு 37 பந்தில் 79 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 43 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 12 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
 
பின்னர் விளையாடிய ஐதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 51 பந்தில் 84 ரன்னும் (5 பவுண் டரி, 5 சிக்சர்), யூசுப்பதான் 27 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். 
ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற பரபரப்பு இருந்தது. போட்டியின் கடைசி ஓவரை பிரவோ வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன்னே கொடுத்தார். இதனால் கடைசி 3 பந்தில் 16 ரன் தேவைப்பட்டது. 4வது பந்தில் சிக்சர் பறந்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. 
 
அப்போது தோனி பிராவோவுக்கு ஆலோசனை வழங்கினார். கடைசியில் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. இது குறித்து தோனி கூறியதாவது, அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கு சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. 
 
2 பந்துகள் இருக்கும் போது அவரிடம் திட்டத்தை மாற்ற சொல்லி ஆலோசனை வழங்கினேன். பந்தை வேறு மாதிரி போட சொன்னேன். அவரும் கடைசி பந்தை யோக்கராக மாற்றினார். இதனால்தான் வெற்றி பெற முடிந்தது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்