புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சிஎஸ்கே ரசிகர்கள்

வியாழன், 19 ஏப்ரல் 2018 (09:04 IST)
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும் திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், சமீபத்தில் சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது.
 
இந்த நிலையில் நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை காண நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர். சிஎஸ்கே போட்டியை பார்க்க பலநூறு மைல்கள் கடந்து செல்லும் தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை ஐபிஎல் போட்டியின் முக்கியத்துவத்தை யாராலும் குறைக்க முடியாது என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்