“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

vinoth

வெள்ளி, 9 மே 2025 (14:30 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதே போல பாகிஸ்தானில் நடந்து வரும் PSL தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது குறித்து சி எஸ் கே அணி தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் “நாடுதான் முக்கியம். மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளது. சி எஸ் கே அணி ஏற்கனவே இந்த சீசனில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்