ஐபிஎல் கோப்பை இந்த அணிக்கு தான்: ஜோதிடர்கள் கணிப்பு!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:43 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


 
 
அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சில நட்சத்திர வீரர்கள் காயங்கள் மற்றும் சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
 
இருப்பினும் ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு எந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜோதிடர்களின் கணிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்