ரஷ்யாதான் உலகிற்கு ஓட்காவை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய மொழியில் ஓட்கா என்றால், தூய்மையான தண்ணீர் என்று பொருள். கம்பு, கோதுமை, உருளை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பிலிருந்து தயாரிப்பதே ஓட்கா. இந்த ஓட்காவில் உள்ள நன்மைகளை தெரிந்துக்கொள்வோம்.
# ஓட்கா ஆரம்பத்தில் மருத்துவத்துக்கே, அதிகம் பயன்பட்டது. சமீபத்தில் பழங்கள், இஞ்சி, இலவங்கம், வெண்ணிலா போன்ற பல நறுமணங்கள் ஓட்காவில் சேர்க்கப்படுகின்றன.
# ஓட்காவில், 38-40 சதவீதம் வரை, ஆல்கஹால் உள்ளது. எனவே, இதை குறைவாக குடித்தால், உடலுக்கு நன்மை தரும்.
# ஓட்கா ஒரு சிறந்த கிருமிநாசினி. உடல்நலனுக்கும், சரும பொலிவிற்கு, மனவளத்திற்கு நன்மைகள் செய்யும்.
# பல்வலி வந்தால், பஞ்சில் சிறிது ஓட்காவை நனைத்து, பல் ஈறுகளில் வைத்து வர, பல்வலி உடனே மறையும்.