ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிட கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு, சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகுமாம்.
ஆனால், தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.