இன்னும் ஷூட்டிங்கே முடியல; ஜாலியா படத்துக்கு போன டாம் க்ரூஸ்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (13:16 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் முடியாத நிலையில் வேறு படத்தை பார்க்க சென்ற சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்து, தயாரித்து வரும் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் அடுத்த பாகமும் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மீத ஷூட்டிங்கை லண்டனில் தனியாக செட் போட்டு நடத்தவும் டாம் க்ரூஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

கொரோனாவால் திரையரங்குகளும் திறக்கப்படாத நிலையில் புதிய படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்தது. தற்போது உலகம் முழுவதும் சில திரையரங்குகளே திறக்கப்பட்டுள்ள நிலையில் ஹாலிவுட் இயக்குனர் க்றிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தியேட்டர்களில் மட்டும் வெளியாகியுள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தனது ஷூட்டிங் பணிகள் தொடங்காதது குறித்து கூட கவலைப்படாத டாம் க்ரூஸ் டெனட் படத்தை பார்க்க சென்றிருக்கிறார். மேலும் டெனட் படத்தை தான் பார்த்த அனுபவங்களை ட்விட்டரில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அவரது பதிவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரியாக்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்