பிக் பாஸ் டைட்டில் வின்னராக விக்ரமன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் அசீமுக்கு முக்கிய டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்துள்ளது. மேலும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க தொகையும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பே விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என பார்வையாளர்கள் கணித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அவருக்கு வாக்குகள் குறைந்ததா? அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பது என்ற சந்தேகத்தை பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.