திருப்பதியில் நிறைவு பெற்றது வைகுண்ட ஏகாதேசி தரிசனம்...

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (22:25 IST)
திருப்பதி ஏழு கடந்த 10 நாட்களாக நடந்த வைகுண்ட ஏகாதேசி தரிசனம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருப்பதி கோவிலில் கடந்த 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
இதனை அடுத்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் சொர்க்கவாசல் தரிசனம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி என்று வைகுண்ட ஏகாதேசி வாசலை அடைத்தனர். 
 
வைகுண்ட ஏகாதேசியில் கலந்து பத்து நாட்களாக 6 லட்சத்து 9219 பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்