இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இப்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிகினிங் என்ற படத்தை ரிலீஸ் செய்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி மீண்டும் கமல்ஹாசனோடு இணைந்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல் அடுத்தடுத்து பல இயக்குனர்களை ஒப்பந்தம் செய்து வைத்துள்ள நிலையில் திருப்பதி பிரதர்ஸ் படத்தை எப்போது தொடங்குவார் எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்த பெரிய படங்களுக்கு இடையே கமல், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு தேதிகள் ஒதுக்குவார் என்றும், அந்த படத்துக்கான இயக்குனர் யார் என்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.