பழனி முருகப்பெருமானின் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடியில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கிராமசாந்தி, வாஸ்து பூஜை, அஸ்திரதேவர் உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கி, முருகப்பெருமானுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.