மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா: முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (18:35 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் மீனாட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.  

மீனாட்சி அம்மனின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தை பார்ப்பதற்கு அதிக பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது. இந்த விழா அக்டோபர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு விதவிதமான அலங்காரம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நவராத்திரி திருவிழா நடைபெறும் ஒன்பது நாட்களிலும் திருக்கல்யாணம் மண்டபத்தில் காலை மாலை ஆன்மீக சொற்பொழிவு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்