இந்தியாவில் இரண்டே இடங்களில் சித்திரகுப்தருக்கு சந்நிதி.. இரண்டு தமிழகத்தில் தான்..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (19:15 IST)
இந்தியாவிலேயே சித்திரகுப்தருக்கு இரண்டு இடங்களில் சன்னதி இருக்கும் நிலையில் அந்த இரண்டும் தமிழகத்தில் இருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. 
 
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது.  சித்திரை மாதம் இந்த சன்னதியில் சித்திரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சித்ரகுப்தரின் திருநாளில் அண்ணாமலையார் கோயிலில் இருந்து கலசத்தில் தீர்த்தம் எடுத்து வந்து சித்திரகுப்தற்கு பூஜை நடத்தப்படும். அதேபோல் பக்தர்கள் பாதம் பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் இருந்து தீர்த்தம் தெளித்து வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிகார பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்