சிவபெருமானுக்கு தீர்த்தவாரி செய்ய வேண்டும். மணம் மிகுந்த மலரை சிவபெருமானின் உச்சி முதல் திருத்தாள் வரை தூவவேண்டும். தூவும் பொழுது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். என்று லிங்க புராணம் கூறுகிறது.
ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
1. சித்திரை மாதம்: இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம்: வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.