முருகப்பெருமானுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்ன...?

செவ்வாய், 21 ஜூன் 2022 (17:07 IST)
முருகப்பெருமானுக்கு மூன்று விரதங்கள் மிகவும் உகந்தவையாகும். அவை, வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் ஆகும்.


வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளிலும், நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்திலும், திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்தது, சக்தியானது.

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் இவ்விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

செவ்வாய்க்கிழமை காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்கு சென்று வழிபடவேண்டும்.

பின்னர் வீடு திரும்பியதும் பால், பழச்சாறு மட்டும் அருந்தி முருகனின் திருநாமங்களை கூறி விரதம் இருக்கலாம். மாலையில் மீண்டும் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்