கருப்பான சருமத்தை வெள்ளையாக்கும் இயற்கை குறிப்புகள்...!!

Webdunia
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின்  மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்கலாம்.

தயிர் சருமத்தை மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் அந்த தயிருடன் கடலை மாவு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், கருமைகள் அகலும்.
 
கற்றாழை ஜெல்லிற்கு சருமத்தில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் சக்தி உள்ளது. மேலும் இதற்கு சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எனவே கற்றாழை ஜெல்லை தினமும் கால்கள் மற்றும் கைகளில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ  வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் மற்றும் கால்கள் கருமையடையாமல் இருக்கும்.
 
உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை கைகள் மற்றும் கால்களில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
 
கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றிவிடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவை போட்டு, தயிர் ஊற்றி  பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவ வேண்டும்.
 
வெள்ளரிக்காய் சாற்றில், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள  கருமை அகலும்.
 
சந்தனப் பொடியைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் இளமையுடன் பொலிவாக காட்சியளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்