வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும். கொதிக்கும் தேங்காய் எண்ணெய்யில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம்.