பொலிவிழந்த முகத்தை சரிசெய்ய உதவும் ஃபேஸ் பேக்குகள் !!

Webdunia
இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகவும், சருமம் எப்போதும் பிரகாசமாகவும் காணப்படும். 


காய்ச்சாத பச்சை பால் சருமத்தில் உள்ள கருமை போக்கி பொலிவை ஏற்படுத்தும். சரும நிறத்தை அதிகரிக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் முகத்தை கழுவிய பின்பு, பச்சை பாலை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் முகம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.
 
கற்றாழை ஜெல் ஒரு அற்புதமான மாய்ஸ்சுரைசர். தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், சருமம் மென்மையாக இருப்பதோடு, பளிச்சென்று பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
 
சிறிது கிளிசரினுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கிளிசரின் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கும் மற்றும் எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
 
முல்தானி மெட்டி மற்றும் தேன் ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு முகத்தை முதலில் நீரில் கழுவி உலர வைத்து, பின் முல்தானி மெட்டியை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை இரவு தூங்கும் முன் போட்டால், காலையில் உங்கள் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
 
சருமத்தின் பொலிவை அதிகரிக்க இரவு தூங்கும் முன் ஃபேஸ் பேக்கை போடுவது ஒரு சிறந்த வழி. அதுவும் மஞ்சள் தூள், சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

அதன் பின் ரோஸ் வாட்டரால் முகத்தை ஒருமுறை துடைத்திடுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்