கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள் குறித்து பார்ப்போம் !!

கல்யாண முருங்கையின் பூ, விதை, இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இதனை முள்முருங்கை என்ற பெயரும் உண்டு. 

கல்யாண முருங்கை இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான குறைகள் நீங்கும் கருமுட்டை உற்பத்தி அதிகரிக்கும்.
 
கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்து 5 மிலி அளவு சாறு அதே அளவு வெந்நீர் கலந்து சாப்பிட வாந்தி வரும். வயிற்று புளிப்பு நீங்கும். குடற்பூச்சியை அகற்றும், செரிமாணத்திறனை அதிகரிக்கும்.
 
கல்யாண முருங்கை இலைச்சாற்றை இரண்டு, மூன்று துளிகளை காதினுள் விட கத்துவலி நீங்கும்.
 
கல்யாணமுருங்கை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி சிறுது சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து வதக்கி வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு 4, 5 தடவை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இதன் இலையை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க தோல்நோய்கள் தீரும்.
 
கல்யாணமுருங்கை இலைச்சாறு 30மிலி வீதம் 10 நாட்களுக்கு சாப்பிட மாதவிடாய் வலி நீங்கும். இதன் இலையை அரைத்து கட்டிகளுக்கு போட கட்டிகள் குணமாகும். இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் உடனே குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்