சமையலில் பயன்படுத்தப்படும் கசகசாவில் இத்தனை பயன்களா.....?

கசகசா விதைகள் உடலை பளபளப்பாக்கும், ஆண்மையை அதிகரிக்கும், பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும், வயிற்றுப்போக்கு, வாய் புண், செரிமானம் இல்லாமை போன்றவற்றை குணப்படுத்தும். மேலும் புற்று நோயை தடுக்க உதவும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் கசகசாவை சேர்த்து அரைத்து பாலில் கலந்து சிறிது பானக்கற்கண்டு சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் புதிதாக திருமணம் செய்யும் ஆண்களுக்கு இது போன்று கொடுப்பது வழக்கம்.
 
கசகசாவுடன் வால்மிளகு, கற்கண்டு, வாதுமை பருப்பு அனைத்தும் சமஅளவு எடுத்து இடித்து நெய் அல்லது தேன் சேர்த்து பிசைந்து லேகியம் போன்ற பதத்துடன் வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து இழப்பு, மூல நோய்கள் குணமாகும்
 
ஆண்மையை அதிகரிப்பதோடு கருவுறுத்தலை அதிகரிக்கிறது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்வதாக ஆய்வுகளை கண்டறியப்பட்டுள்ளது.
 
சாதிக்காய், கசகசா இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து பனகற்கண்டை பாகுபோல் காய்ச்சி அதில் தேனையும் கலந்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
 
கசகசாவை உணவுகளில் சேர்ப்பதால் செரிமானக்கோளாறு நீங்குகிறது. கசகசாவின் விதைகளை பவுடராக்கி சூடான பாலில் கலந்து சாப்பிட நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
 
பாதம், பிஸ்தா, வெள்ளரி விதை இவற்றுடன் கசகசாவை சேர்த்து அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள், கருவளையம் நீங்கி முகம் பளபளப்பாகும்.
 
கசகசாவை தேங்காய் துவையலில் சேரத்து அரைத்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிட வயிற்றுப்போக்கை குணமாக்கும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்