வெண்புள்ளிகள் பாதிப்பை தடுக்கும் வழிகள்!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (20:19 IST)
வெண்புள்ளிகள் நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
 
உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய உணவுப் பொருள்கள் குறைபாடு காரணமாக வெண்புள்ளி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் மரபணு நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் வைரஸ் கிருமிகள் தாக்கம் காரணமாகவும் வெண்புள்ளிகள் ஏற்படலாம் 
வெண்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்க உணவில் மீன் வகைகள், தானியங்கள், கோதுமை கலந்து பொருட்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ சத்து நிறைந்த மஞ்சள் சிவப்பு பச்சை நிற காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் குறிப்பாக மாம்பழம், பப்பாளி, மிளகு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
 
இதே போல் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ள விதைகள், முளை கட்டிய பயிர் வகைகள், மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள், பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 
அதேபோல்   சூரிய ஒளி அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரசாயனம் கலந்த எண்ணெய் , ஷாம்பு ஆகியவற்றை தலைமுடிக்கும், உடலுக்கு பயன்படுத்துவதை வெண்புள்ளி ஏற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்