சிவப்பு நிறத்தில் உள்ள சத்துள்ள பழங்கள்..!

Mahendran

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:58 IST)
சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அனைத்தும் சத்து நிறைந்ததாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக மாதுளையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளது என்றும் புற்றுநோய் இதய நோய் ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் இந்த பழத்திற்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
 
அதே போல் ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 
ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி  அதிகம் உள்ளதால் எடை குறைப்புக்கு வழிவகை செய்யும்.
 
செர்ரி பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்றும் தர்பூசணி பழம் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என்றும் புறப்படுகிறது. மேலும் பிளம்ஸ் பழத்தில் தாதுக்கள் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்