பாமாயில் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா?

Mahendran

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (19:18 IST)
பாமாயில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு என்று ஏற்கனவே பலர் கூறி இருக்கும் நிலையில் பாமாயில் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெரும்பாலும் கடைகள் மற்றும் பிளாட்பாரத்தில் விற்கும் உணவு பண்டங்கள் தின்பண்டங்கள் ஆகியவை பாமாயிலில் தான் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக பலமுறை பயன்படுத்திய எண்ணையை பயன்படுத்துவதால் அது விஷமாக மாறி உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
பாமாயிலை வதக்குதல் வறுத்தல் போன்ற சின்ன சின்ன உணவு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் கெடுதல் இல்லை என்றும் ஆனால் அதிக அளவு பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் பாமாயில் குறைவாக பயன்படுத்தினால் பிரச்சனை இருக்காது ஆனால் அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்