வைட்டமின் பி12 குறைந்தால் ஆண்களுக்கு பெரும் ஆபத்து.. என்னென்ன நடக்கும்?

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (20:24 IST)
வைட்டமின் பி12  என்பது மனிதனுக்கு மிகவும் இன்றி அமையாத ஒரு வைட்டமின் என்பதும் குறிப்பாக ஆண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
 வைட்டமின் பி12 குறைபாடு உள்ள ஆண்களுக்கு இரவு நேரங்களில் கால்களில் கூச்ச உணர்வு இருக்கும் என்றும் உணர்வின்மை அல்லது அசாதாரண உணர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இரவு நேரத்தில் கால்கள் உணர்ச்சி அற்றதாக மாறலாம் என்றும் எனவே வைட்டமின் பி12 அளவை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயுடன் வைட்டமின் பி12 தொடர்புபடுத்தி பார்க்கப்படும் என்றும் நடப்பதில் சிரமம் அல்லது மாலை இரவு நேரங்களில் நடக்க முடியாமல் இருந்தால் அதற்கு வைட்டமின் பி12 ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் இருந்தால் கால் மற்றும் பாதங்களில் வலி அதிகமாக இருக்கும் என்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வைட்டமின் பி12 குறைபாடு கொண்டிருந்தால் பல்வேறு சிக்கல்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.
 
அசைவ   உணவுகள் குறிப்பாக கடல் உணவுகள், முட்டை, பால், தயிர் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொண்டால் வைட்டமின் பி12 உடலுக்கு கிடைக்கும் அதே போல் வாழைப்பழங்கள், பெர்ரி பழங்கள், தானியங்கள், கீரை ஆகியவையும் வைட்டமின் பி12 அதிகரிக்க காரணமாக இருக்கிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்