இந்த இந்த நிலையில், இந்த வழிப்பறியால் பாதிக்கப்பட்ட இருவர் போலீஸில் புகார் அளித்தனர். அதில், பக்வாரா நகரில் ஜிடி சாலையில் இரவில் தனியாக செல்லும் ஆண்களை குறிவைத்து, ஆசைகாட்டி, தனியாக அழைத்துச் செல்கின்றனர்.
அதன்பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்கின்றனர் என தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில பெண்கள் இரவில் கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களில் 20 வயதுடையவர்கள் மறைவான பகுதியில் பதுங்கிவிடுவதாகவும், இதற்கு யாராவது எதிர்ப்பு கூறினால், பொய்யான வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டி அவர்களை அனுப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்புகாரின் அடிப்படையில், போலீஸார் நடத்திய சோதனையி 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 6 பேர் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.