பழங்களை தோலுடன் சாப்பிடலாமா? எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம்..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (19:53 IST)
பழங்களில் சில பழங்கள் தோலுடன் சாப்பிடும் வகையிலும் சில பழங்கள் தோலை எடுத்து விட்டு சாப்பிடும் வகையிலும் இருக்கும் என்பது தெரிந்ததே. மாம்பழம் சப்போட்டா திராட்சை கொய்யா ஆப்பிள் ஆகிய பழங்கள் தோலுடன் சாப்பிடுவது நல்லது 
 
அதேபோல் பழங்களை பிழிந்து வடிகட்டி சாற்றை மட்டும் குடிக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து விலக்கப்படும் என்றும் எனவே பொதுவாக பழங்களை ஜூஸ் போட்டு குடிக்காமல் பழமாக சாப்பிடுவது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. 
 
பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதால் பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் குறிப்பாக ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டால் தான் முழு அளவு சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
கொய்யா பழத்தின் தோலில் சருமத்திற்கு நல்லது செய்யும் வைட்டமின்கள் இருப்பதால் கண்டிப்பாக தோலுடன் தான் சாப்பிட வேண்டும் என்றும் அதேபோல் சப்போட்டா பழங்களின் தோல், காயங்களை ஆற்றும் குணம் உள்ள வேதிப்பொருட்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வாழைப்பழத் தோலில் கால்சியம் அமிலம் ஆகியவை இருந்தாலும் வாழைப்பழத்தை யாரும் தோளுடன் சாப்பிடுவதில்லை. ஆனால் வாழைப்பழத்தை தோளோடு சாப்பிட்டால் மூட்டு வலி கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 
 
திராட்சை பழத்தை தோலுடன் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்