பாகற்காய் சாப்பிடுங்கள், சர்க்கரை நோயை விரட்டுங்கள்..!

திங்கள், 19 ஜூன் 2023 (18:42 IST)
பாகற்காயை அவ்வப்போது சாப்பிட்டால் சர்க்கரை நோயை விரட்டி விடலாம் என கூறப்படுகிறது. 
 
சர்க்கரை நோய் தற்போது அதிக அளவில் பரவி வரும் நிலையில் பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி 2, கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன 
 
பாகற்காயில் கொழுப்பு சத்து கார்போஹைட் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயில் உள்ள விதைகள் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் அந்த விதையை சாப்பிடுவதால் வயிற்று வலி வயிற்றுப்போக்கு தலைவலி போன்ற நோய் தீரும் 
 
ஆனால் அதே நேரத்தில் பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. 
 
சர்க்கரை நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்