முதல்வர் ஸ்டாலின் என்னிடம் போனில் பேசினார்.. அமைச்சர் ரோஜா ட்விட்..!

சனி, 17 ஜூன் 2023 (16:19 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தன்னை போனில் தொடர்பு கொண்டு தனது உடல் நலம் குறித்து விசாரித்தார் என நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடிகை மற்றும் அமைச்சர் ரோஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மனிதாபிமான முறையில் தன்னிடம் உடல் நலம் குறித்து போன் மூலம் விசாரித்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 முதல்வர் ஐயா என்னை தொலைபேசியில் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்றும் மேலும் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி தன்னை அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். மேலும் எனது உடல் நலம் குறித்து சில அறிவுரைகளை கூறிய அவர் அன்புடனும் அக்கறையுடனும் விசாரித்தது என் மனதை தொட்டது என்று தெரிவித்தார். 
 
இதன்மூலம் தமிழக முதல்வர் ஒரு சிறந்த நிர்வாகி மட்டும் என்று ஒரு அக்கறையுள்ள மனிதன் என்பதையும் நிரூபித்துள்ளார் என்று ரோஜா கூறியுள்ளார். அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்