பிஸ்கட் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

செவ்வாய், 20 ஜூன் 2023 (18:45 IST)
பொதுவாக குழந்தைகள் பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடும் என்பதும் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் பிஸ்கட்டுகளை அதிகம் வாங்கிக் கொடுப்பதும் ஆன நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 
 
ஆனால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிட்டால் அதுவே பல பிரச்சினைகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தையின் செரிமான சக்தி பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் குறையும் என்றும் பிஸ்கட்டுகள் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை உடையதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
பிஸ்கட் என்பதை உணவுக்கு மாற்றாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உடல்நலம் இல்லாத நிலையில் உணவு சாப்பிட முடியாத பட்சத்தில் மட்டும் பிஸ்கட் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
சத்தான உணவு மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் அதற்கு மாற்றாக ஒருபோதும் பிஸ்கட்டுகளை கொடுக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள் சுண்டல் ஆகிவற்றை கொடுக்கலாம் என்றும் பிஸ்கட்டுகளை அளவோடு குழந்தைகளுக்கு கொடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்